News August 28, 2025
BREAKING: மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடம்

தூய அரசியலுக்கு சொந்தக்காரரான நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடல்நிலை நேற்று இரவு பின்னடைவை சந்தித்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 28, 2025
ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

2015-ல் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய <<17541840>>ஆம்பூர் கலவர வழக்கில்<<>> மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலவரத்தின்போது கோடிக்கணக்கான பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை விற்று நஷ்டத்தை ஈடுகட்டுமாறு ஜட்ஜ் மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
News August 28, 2025
பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன்.. அடடே ஸ்கீம்!

உங்கள் வீட்டு பெண்கள் புதிய தொழில் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்களா? எந்த பிணையமும் இல்லாமல் அவர்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தில் இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். SHARE.
News August 28, 2025
BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2015-ல் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 126 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.