News August 23, 2025
BREAKING: மூத்த தலைவர் அப்போலோவில் அனுமதி

பாமக கௌரவ தலைவரும், MLAவுமான ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட், இன்று மதியத்திற்கு மேல் அப்போலோ தரப்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
Similar News
News March 18, 2026
யாருடன் கூட்டணி? ராமதாஸ் முக்கிய முடிவு!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூட உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அங்குச் செல்ல வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி தடையாக இருப்பதால் ராமதாஸ் தரப்பு பெரும் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. இதனால், ராமதாஸின் முடிவுக்காக ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
News March 18, 2026
டீ-க்கு ₹12, மட்டன் பிரைக்கு ₹200

தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், எந்தெந்த உணவுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற புதிய விலை <<19413031>>பட்டியலை <<>>ECI வெளியிட்டுள்ளது. 2 இட்லி ₹40, வடை ₹15, பொங்கல் ₹50, கிச்சடி ₹60, 2 பூரி, மசால் ₹60, பரோட்டா ₹40, காபி ₹18, டீ ₹12, மோர் ₹13, எலுமிச்சை ஜூஸ் ₹15, ரோஸ் மில்க் ₹40, சைவ சாப்பாடு ₹110, அசைவ சாப்பாடு ₹350, சிக்கன் பிரை (100கி) ₹100, மட்டன் பிரை (100கி) ₹200, சமோசா ₹20, பப்ஸ் ₹20.
News March 18, 2026
வெங்காயம் வாங்கும்போது இதை மறக்காதீங்க!

விலை குறைந்துள்ளது என்பதால் காய்கறிகளை வாங்கிக் குவிக்கிறீர்களா? அப்படியெனில், வெங்காயம் வாங்கும்முன் இந்த அனுபவ டிப்ஸை கவனியுங்கள். அதாவது பெரிய வெங்காயத்தை வாங்கும்போது சின்னதாக பார்த்து வாங்குங்கள். அதில் தான் சத்தும் உணவில் ருசியும் நன்றாக இருக்கும். சின்ன வெங்காயத்தை பெரிதாக பார்த்து வாங்குங்கள். அதை நறுக்கி சமைக்கும்போது உணவிலும் அதன் ருசி எதிரொலிக்கும். நீங்க எப்படி வெங்காயம் வாங்குவீங்க?


