News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் புதிய அறிவிப்பு

கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாகவே நேற்று பேசியதாக செங்கோட்டையன் சற்றுமுன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதனை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்து, பெரும் ஆதரவு அளித்ததற்கு கோடான கோடி நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையனின் பேச்சு குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக EPS, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு?

வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பயிற்சியின் போது, முதன்முறையாக <<17592762>>ஸ்பான்சர்<<>> இல்லாத ஜெர்ஸியை அணிந்து கொண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், பழைய ஸ்பான்சர்ஷிப் ஜெர்ஸிகளை விட, இந்த புதிய டிரெய்னிங் ஜெர்ஸிகள் அருமையாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 6, 2025
BREAKING: பள்ளிகளில் புதிய மாற்றம்.. இனி எல்லாமே ஈசி!

CBSE பள்ளிகளில் +2 மாணவர்களின் வசதிக்காக புதிய (Integrated Payment System – IPS) போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல் மூலம் செய்முறை தேர்வுக் கட்டணம், தேர்வு மேற்பார்வையாளர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலேயே செலுத்தலாம். மேலும், +2 செய்முறை தேர்வுகளுக்கான அனைத்து தரவுகளும் விரைவில் உள்ளீடு செய்யப்பட உள்ளன.
News September 6, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? மிரட்டியவர் கைது

மும்பையில் 1 கோடி மக்களை கொல்லும் வகையில் 34 இடங்களில் <<17621243>>வெடிகுண்டு <<>>வைத்துள்ளதாக கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் (50), பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – ஜிகாதி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கூறி, மும்பை போலீசாருக்கு வாட்ஸ்அப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழும் அஸ்வின் குமார், ஒரு ஜோதிடர் ஆவார்.