News September 23, 2025

BREAKING: நள்ளிரவில் கிளம்பிய செங்கோட்டையன்

image

OPS, TTV ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை செய்த செங்கோட்டையன், நள்ளிரவு 12 மணியளவில் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். நீலகிரியில் இன்று நடக்கும் பரப்புரையில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கார் மூலம் கோபி, சத்தியமங்கலம் வழியாக இபிஎஸ் செல்கிறார். கோபி பஸ் ஸ்டாண்டில் காலை 7 மணிக்கு அவரை அதிமுகவினர் வரவேற்கின்றனர். இதை தவிர்க்கவே செங்கோட்டையன் சென்னைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது.

Similar News

News September 23, 2025

பிரபல நடிகருக்கு 61 வயதில் திருமணம்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ்(61), தனது நீண்டநாள் காதலியான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட்(52) என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வரும் நிலையில், மீடியா வெளிச்சம் படாமல் குடும்பத்தினர்& நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. கீனு ரீவ்ஸின் Matrix, John Wick படங்கள் இந்தியாவிலும் பெரும் வெற்றி பெற்றன.

News September 23, 2025

மூலிகை: ஆடாதொடையின் அற்புத மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➤ஆடாதொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும் ➤ஆடாதொடை இலையின் சாறும், தேனும் கலந்து குடித்து வந்தால் மூச்சு திணறல், இருமல் போன்றவை குணமாகும் ➤மருதம்பட்டை, ஆடாதொடை பொடியை, வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்தால், நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.

News September 23, 2025

கேரளாவில் அதிகரிக்கும் இளம் தம்பதியர் விவாகரத்து

image

கேரளாவில் திருமணம் செய்த குறுகிய காலத்திலேயே விவகாரத்து செய்வோரின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் பதிவு செய்யப்படும் அதே வேளையில், 30,000 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர், ஓராண்டில் திருமணம் செய்தவர்கள் என RTI மூலம் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!