News October 30, 2025
BREAKING: செங்கோட்டையன் முடிவை அறிவித்தார்

கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, பசும்பொன்னில் OPS, சசிகலா, டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பாக <<18149318>>பேசிய EPS<<>>, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எவ்வித தயக்கமும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 30, 2025
பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபிலாய்ட் ரோஜர் மையர்ஸ் ஜூனியர்(42) காலமானார். வில் ஸ்மித் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ‘The Fresh Prince of Bel-Air’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர்கள் பலரும் மாரடைப்பால் மறைந்து வருகின்றனர்.
News October 30, 2025
நெல் கொள்முதலில் பொய் பேசும் CM ஸ்டாலின்: EPS

திமுக ஆட்சியில் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் உள்ளதாக சாடிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 1.15 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், களைகள் நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
News October 30, 2025
தமிழகத்தில் மேலும் ஒரு செஸ் கிராண்ட்மாஸ்டர்!

சென்னையை சேர்ந்த 16 வயதான இளம்பரிதி புதிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளார். FIDE ரேட்டிங்கில் 2500 புள்ளிகள், கிராண்ட்மாஸ்டராகும் 3 விதிகளை அவர் பூர்த்தி செய்ததால் TN-ன் 35-வது, இந்தியாவின் 90-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார். இவர் செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்த் அகாடமியில் பயிற்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இளம்பரிதிக்கு DCM உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


