News February 28, 2025
BREAKING: போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜர்

விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் சம்மனை போலீசார் ஓட்டினர். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி அவரை கோரியிருந்தனர். அதையேற்று, சீமான் இரவு 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
News March 1, 2025
தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு: ஜோதிமணி

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், வக்கிரத்துடன் பேசுவது அல்ல என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பொருட்டாக மதிக்காத சீமான் போன்றவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.