News August 18, 2024
BREAKING: பிரபல TV நிறுவனத்திற்கு சீல்

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ₹4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ₹500 கோடி மோசடி செய்த புகாரில் அவர் கைதாகியுள்ளார்.
Similar News
News November 15, 2025
பணம் கையில் நிற்க வேண்டுமா? இதை பண்ணுங்க…

இந்திய நடுத்தர வர்க்கம் அதிகம் சம்பாதித்தாலும் ஏன் எப்போதும் பணப் பற்றாக்குறையிலேயே இருக்கிறது என்று தெரியுமா? நாம் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சில நிதி பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். உங்கள் நிதி கட்டுப்பாட்டை அதிகரித்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 15, 2025
தள்ளுவண்டி உணவகங்களுக்கு உரிமம் கட்டாயம்

பானிபூரி, சமோசா, சிக்கன் பகோடா விற்கும் தள்ளுவண்டி உணவகங்களுக்கு உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைனிலும், இ-சேவை மையங்களிலும் விற்பனை உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அது இலவசம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு உரிமம் இல்லாவிட்டாலும், விதிகளின்படி உணவு விற்கப்படாவிட்டாலும் அபாரதம் விதிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
News November 15, 2025
‘அம்மா நான் சாகப் போறேன்.. நீங்க சந்தோஷமா இருங்க’

‘அண்ணா இப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா, நன்றாக படி. நான் இந்த வாழ்வில் சோர்வடைந்துவிட்டேன். அம்மா, நான் போகிறேன். அம்மா, அப்பா சந்தோஷமாய் இருங்க’. குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடைசி வரிகள் இவை. வீட்டில் தூக்கிட்ட மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகம். சிறுமியின் இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.


