News May 24, 2024

BREAKING: ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

image

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

Similar News

News March 9, 2026

சற்றுமுன்: முன்னாள் MLA காலமானார்

image

காங்., மூத்த தலைவரும், EX MLA-வுமான சி.எஸ்.சுவாமிநாதன்(80) காலமானார். காங்., கமிட்டியின் பொதுச்செயலாளர், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-ல் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக தேர்வானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜோதிமணி, சுவாமிநாதனின் எளிமையான சுபாவமும், நேர்மையும் அவரை ஒரு சிறந்த மக்கள் தலைவராக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 9, 2026

மார்ச் 14-ல் பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம்

image

டெல்லியில் வரும் 14-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பட்டியல், வேட்பாளர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் நபின், வானதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News March 9, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

image

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!