News August 5, 2024

BREAKING: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? விளக்கம்!

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் காத்திருந்தனர். எனினும், வானிலை மைய அதிகாரிகளுடன் ஆலோசித்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 16, 2026

தேனி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 16, 2026

ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News January 16, 2026

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

image

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.

error: Content is protected !!