News April 23, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
டி20-யில் அதிக சிக்ஸர்கள் அடுத்தது யார்?

டி20 கிரிக்கெட்டின் அழகே அதன் அதிரடியில்தான் உள்ளது. பந்துவீச்சாளர் எவ்வளவு வேகமாகவும், சாமர்த்தியமாகவும் பந்துவீசினாலும், அதை பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு விரட்டுவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். கண்களை கவரும் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: CM

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இன்றைய நாளை, எல்லை போராட்ட தியாகிகள் நாள் என்று கூறி, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளை போராடி பெற்றுத்தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நம் தலைவர்கள் வழியில் உரிமைகளை காப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 1, 2025
இசை நிகழ்ச்சியில் ₹24 லட்சம் மதிப்புள்ள போன்கள் அபேஸ்!

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸ் சமீபத்தில் மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் என்ரிக்கின் இசையில் திளைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திருடர்கள் கைவரிசை காட்டி ₹24 லட்சம் மதிப்புள்ள 73 செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர்.


