News April 14, 2024
BREAKING: ₹1க்கு சானிட்டரி நாப்கின்

சானிட்டரி நாப்கின் ₹1க்கு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஒரு பாக்கெட் குறைந்தபட்சம் ₹25 – ₹50 வரை; அதாவது ஒரு நாப்கின் ₹3க்கும் மேல் விற்பனையாகும் நிலையில், தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது போல் நாப்கின் ₹1க்கு வழங்கினால், பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனால், பெண்களின் சுகாதாரம் மேம்படும்.
Similar News
News September 9, 2025
டாலருக்கு எதிராக ₹ சரிவு: FM விளக்கம்

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் உலக சூழல் என FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்து வந்தாலும், வேறெந்த நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா மட்டுமல்ல பிறநாடுகளின் நாணயங்களுக்கும் டாலர் விஷயத்தில் அதே நிலை ஏற்படுவதாக FM குறிப்பிட்டார்.
News September 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 9, 2025
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: அன்புமணி

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அவர் X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர்களுக்கு முதற்கட்டமாக நீண்டகால விசாவும், பின்னர் குடியுரிமையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.