News January 2, 2025
BREAKING: கேப்டனாக பும்ரா நியமனம்

ஆஸி., அணிக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் IND மோசமாக விளையாடியதால், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கடைசி போட்டியில் இருந்து ரோஹித் விலகியுள்ளார். அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
விநோத உணவுகள்: நீங்க ட்ரை பண்ணுவீங்களா?

உலகில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பிரத்யேக பாரம்பரிய உணவு முறைகள் உள்ளன. புவியியல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு மக்களிடையே உணவு முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகிறது. அப்படி, ஒரு சாரார் விரும்பி உண்ணும் உணவு, இன்னொரு சாராருக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், வியட்நாமின் விநோத உணவுகளை மேலே பட்டியலிட்டுள்ளோம். அதை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்
News September 11, 2025
எனக்கு எதிராக பணம் கொடுத்து பிரசாரம்: அமைச்சர்

தனக்கு எதிராக சோஷியல் மீடியாவில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். <<17545460>>எத்தனால் கலப்பு<<>>(E20) பெட்ரோலை மத்திய அரசு ஊக்குவிக்க, கட்கரியின் மகன் எத்தனால் பிசினஸில் இருப்பதே காரணம் என்று சொல்லப்படுவதையே அவர் இப்படி குறிப்பிடுகிறார். E20 பெட்ரோல் பாதுகாப்பானது என SC-யும், வாகன நிறுவனங்களும் உறுதிசெய்த பின்பும், தான் குறிவைக்கப் படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
ஜிவி சம்பளம் வாங்காத படங்களின் லிஸ்ட்

காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சார்ந்த நல்ல கதை என்பதால், அப்படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடித்துள்ள பிளாக்மெயில் பட நிகழ்ச்சியில் பேசும்போது, வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவர் இயக்கிய அநீதி படத்திற்கும், அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.