News April 14, 2025
BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து RLJP கட்சி விலகல்

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) விலகுவதாக அக்கட்சி முக்கிய தலைவர் பசுபதி குமார் பராஸ் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார். தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், ஆதலால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் முக்கிய தலைவரான சிராக் பாஸ்வான் ஏதும் கூறவில்லை.
Similar News
News November 16, 2025
தனியார் பஸ் கட்டணம் உயரப் போகிறது

டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்க, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2026 ஜன.6-ம் தேதி இறுதி முடிவை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
News November 16, 2025
அயோத்தி ராமர் கோயிலுக்கு CM ஸ்டாலின் போவாரா?

அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, 150 அடி உயர துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது. வரும் 25-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் PM மோடி பங்கேற்கிறார். அனைத்து மாநில CM-களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது. CM ஸ்டாலின் போவாரா (அ) கடவுள் பக்தி கொண்ட தனது மனைவியை அனுப்பி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு CM செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
தீவிரமடைந்த புயல் சின்னம்.. கனமழை பொளந்து கட்டும்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.


