News April 10, 2025

BREAKING: ஆர்சிபி முதலில் பேட்டிங்

image

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காணலாம். இப்போட்டியில் ஆர்சிபி வெல்லுமா, டெல்லி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

காங்கிரஸில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

image

அன்மையில் நடைபெற்ற பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைப்பது குறித்தே அவர் அலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News December 16, 2025

SPORTS 360°: Hat-trick வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

image

*நாளை நடைபெற உள்ள 3-வது ஆஷஸ் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. * U19 ஆசிய கோப்பையில் இன்று இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்ள உள்ளது. *BBL அறிமுக போட்டியில் ஒரே ஓவரில் 2 நோ பால் வீசியதால் ஷஹீன் அப்ரிடி ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். *U19 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.

News December 16, 2025

சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

image

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். ஆனால் சூரிய ஒளியை பெற சரியான நேரம் எது என பலருக்கும் தெரியாது. ‘வைட்டமின் டி’ பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம்.

error: Content is protected !!