News July 6, 2025

BREAKING: அன்புமணியை நீக்கினார் ராமதாஸ்

image

பாமக தலைமை நிர்வாகக் குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை அமைத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி.கே.மணி சிவப்பிரகாசம், பு.தா.அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 21 பேர் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக, அன்புமணியால் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

Similar News

News July 6, 2025

தெய்வத்திருமகள் சியான் பொண்ணா இவுங்க…

image

இன்று வெளியான ‘துராந்தர்’ என்னும் பாலிவுட் படத்தில் டீசரில் இருப்பது யார் என தெரிகிறதா? ரன்வீர் சிங்குடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் இந்த பெண் தான் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சியான் விக்ரமின் மகளாக நடித்தவர். அன்று சுட்டிக் குழந்தையாக ரசிகர்களை ஈர்த்த சாரா அர்ஜூன், தற்போது 20 வயதில் சாரா பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்க இருக்கிறார். தமிழிலும் ஹீரோயினாக யாராவது புக் பண்ணுவாங்களா?

News July 6, 2025

ICUவில் அஜித் குமார் தம்பி… அடுத்தடுத்து திருப்பம்

image

போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸ் தாக்கியதில் தனது கால் பாதங்களில் வலி ஏற்பட்டிருப்பதாக நவீன் கூறியதால் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருப்பதாக அவரது தாய் மாமா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனை போலீஸ் விசாரிக்கும்போது தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறி இருந்தார்.

News July 6, 2025

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய…

image

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய ●அறையிலுள்ள விளக்குகளை அணைத்து, சின்னதாக LED லைட்டின் வெளிச்சம் எங்காவது தெரிகிறதா என கவனியுங்க ●உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் விரலின் பிரதிபலிப்புக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்றால், அந்த கண்ணாடியை நன்றாக செக் பண்ணுங்க ●கேமரா கண்டுபிடிப்பு செயலிகளைப் பயன்படுத்தி, போனின் கேமரா & சென்சார் மூலம் கண்டுபிடிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!