News September 29, 2025
BREAKING: விஜய் உடன் ராகுல் காந்தி பேச்சு

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பிரசார கூட்டத்தில் குழந்தைகள் உள்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பதாக தவெக வழக்கறிஞர் அறிவித்திருந்தார். தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 29, 2025
குறைகளை களையவே ஆணையம்: அருணா ஜெகதீசன்

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரூருக்கு சென்று விசாரணையை துவக்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், குறைபாடுகளை களைவதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பரிந்துரைப்போம் என்றார்.
News September 29, 2025
9-வது முறையாக சாம்பியனான இந்தியா

பாக்., ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக, 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி டைட்டிலை தட்டிச் சென்றது. டி20 வடிவிலான ஆசிய கோப்பையில் இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.