News April 14, 2025

BREAKING: பிஜி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

பிஜி தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1:32 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. அந்த நேரத்தில் மியான்மரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே அங்குக் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News November 24, 2025

இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

image

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News November 24, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

News November 24, 2025

542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!