News April 23, 2025

BREAKING: சவுதி பயணத்தை ரத்து செய்தார் PM மோடி

image

PM மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார். இன்று (ஏப். 23) அதிகாலை 5 மணிக்கு மோடி டெல்லிக்கு வரவுள்ளார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 26, 2025

தர்மபுரி: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!

image

இலக்கிய திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 2024–2025 ஆண்டிற்கான 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

சற்றுமுன்.. விலை மொத்தம் ₹5,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. நேற்று(நவ.25) கிலோவுக்கு ₹3,000, இன்று ₹2,000 என மொத்தம் ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹176-க்கும், கிலோ ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த 2 நாள்களில் மட்டும் 3% உயர்ந்து 1 அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், வரும் நாள்களில் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

News November 26, 2025

லாபத்துக்காக கட்சி ஆரம்பித்த விஜய்: தமிழருவி மணியன்

image

மக்களுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், வீடு, வாகனம் என ஒப்பேறாத திட்டங்களை விஜய் விளம்பரப்படுத்துவதாக தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார். விஜய் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக கட்சி ஆரம்பித்தவர் அல்ல எனவும், தனலாபம் ஈட்ட கட்சியை ஆரம்பித்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ்வை அருகில் வைத்து கட்சி நடத்துவதே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!