News March 17, 2024

BREAKING: 2ம் கட்ட தேர்தல் பத்திர விவரம் வெளியீடு

image

2ஆம் கட்ட தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த நன்கொடை விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி அண்மையில் தாக்கல் செய்தது. அதில் சில பகுதிகள், கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன. இதையடுத்து 2வது கட்ட விவரங்களை தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது.

Similar News

News January 9, 2026

தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

சர்வதேச சந்தையில் நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.69 உயர்ந்து $4,476-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலை(₹1,02,000) மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை அவுன்ஸ் $1.03 குறைந்து $76.84-க்கு விற்பனையாகிறது.

News January 9, 2026

SPORTS 360°: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

image

*விஜய் ஹசாரேவில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய தமிழ்நாடு அணி, நேற்று கேரளாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. *இலங்கை டி20 அணிக்கு இந்திய முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். *மலேசிய ஓபன் பேட்மிண்டனில் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். *72-வது சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முன்னேறியது.

News January 9, 2026

திமுக வலுவாக இல்லை: செல்லூர் ராஜூ

image

காங்கிரஸின் <<18786753>>பிரவீன் சக்கரவர்த்தி <<>>பேசியதை சுட்டிக்காட்டி, திமுக கூட்டணி வலுவிழந்துவிட்டதாக EX அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். திமுக வலுவாக இருந்தால் காங்., இவ்வாறு பேச முடியுமா என கேட்ட அவர், பிரவீன் சக்கரவர்த்தி கேள்விகளுக்கு ஏன் CM ஸ்டாலின் பதில் சொல்லவில்லை எனவும் கேட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகள் இல்லாமல் தனித்து நிற்க திமுக தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

error: Content is protected !!