News April 26, 2025
BREAKING: முன்னாள் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு

EX எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாத ஓய்வூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000ஆக அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேபோல் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.17,500ஆகவும், மருத்துவ படி ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது 1.4.2025 முதல் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.
News December 9, 2025
கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.
News December 9, 2025
இந்திய அணியில் தமிழக வீராங்கனை

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 17 வயதான TN வீராங்கனை ஜி.கமலினியும் அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே WPL-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


