News April 19, 2025
BREAKING : PBKS அபார வெற்றி

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB-க்கு எதிரான போட்டியில் PBKS அபார வெற்றிபெற்றது. மழை காரணமாக போட்டியின் ஓவர் 14ஆக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த RCB 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய PBKS தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாலும், 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
Similar News
News August 10, 2025
Online Shopping-ஆல் வரும் நோய்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!

டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!
News August 10, 2025
CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்

CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வுகளை எழுத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடத் தேர்வுகளை பார்த்து எழுதலாம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2020-ல் தேசிய கல்வி கொள்கையில்(NEP) பரிந்துரை செய்யப்பட்டது. உங்கள் கருத்து?
News August 10, 2025
காது கொடுத்துக் கேளுங்கள்

குழந்தைகளை புரிந்துகொள்ள நாம் முயற்சிப்பதே இல்லை. மாறாக, அவர்கள் தான், நம்மை புரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இதனாலேயே குழந்தைகளை எப்போதும் குறை சொல்கிறோம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை எப்போதாவது காதுகொடுத்து கேட்டிருக்கிறீர்களா? அவர்கள் கூறும் சிறிய விஷயங்களை இப்போது நீங்கள் கேட்காவிட்டால், பின்னர் பெரிய விஷயங்களை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.