News February 23, 2025
BREAKING: இந்திய அணிக்கு பாகிஸ்தான் 242 ரன்கள் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் நிலைத்து நின்று விளையாடியது. முடிவில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பாக். தரப்பில் ஷகீல் 62 ரன்கள் குவித்தார்.
Similar News
News February 23, 2025
மதத்தை கேலி செய்வதா? மோடி கொதிப்பு

கும்பமேளா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்து வருவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பல நேரங்களில் அந்நிய சக்திகள் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவையும் அதன் மதத்தையும் பலவீனப்படுத்துவதாக சாடினார். இந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள், பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
News February 23, 2025
அடிதடி வழக்கு: பாஜக எம்எல்ஏக்கு 3 மாதம் சிறை

பீகார் பாஜக எம்எல்ஏக்கு அடிதடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அலிநகர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரி லால் மற்றும் அவரின் உதவியாளர், உமேஷ் என்பவரை தகராறின்போது தாக்கி மண்டையை உடைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மிஸ்ரி லால், உதவியாளருக்கு 3 மாதம் சிறை, தலா ரூ.500 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், பிணைத் தொகையில் ஜாமீன் அளித்தது.
News February 23, 2025
இதில் எது சிறுத்தை தெரியுமா?

இந்த மூன்றில் முதலில் இருக்கும் Leopardஐதான் நாம் பொதுவாக சிறுத்தைப் புலிகள் என்று அழைக்கிறோம். இவைதான் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் சிவிங்கிப் புலி (Cheetah) ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்பவை. இவைதான் உலகின் வேகமான விலங்கு. மூன்றாவதாக இருக்கும் ஜாகுவார்கள் அமெரிக்க நாடுகளில் அதிகமாக வாழ்கின்றன. இந்த மூன்றில் உங்களுக்கு பிடித்த விலங்கு எது?