News August 6, 2024
BREAKING: ஆபரணத் தங்கம் ₹560 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து, ₹51,200க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹6,400க்கும் விற்பனையாகிறது. தங்கம் மீதான சுங்கவரி குறைப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பது, பத்திரங்கள் மீதான முதலீடு உள்ளிட்டவை காரணமாக இன்று விலை குறைந்ததால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News April 6, 2026
தஞ்சை திமுக மேயர் ராஜினாமா

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயர் முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் களமிறங்கியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே, நாகர்கோவில் மேயர் மகேஷ் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
FLASH: அமீர் வீட்டில் IT அதிகாரிகள் சோதனை

சென்னையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய <<19578024>>ஜாபர் சாதிக்கை<<>> தொடர்ந்து இயக்குநர் அமீர் வீட்டிலும் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ₹2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அது தொடர்பாக இயக்குநர் அமீரிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
மக்களுடன் இருப்பதே மகிழ்ச்சி: டி.ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் வீடு வீடாக சென்று டி.ஜெயக்குமார் வாக்கு கேட்டு வருகிறார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதன்பின் பேசிய அவர், ராயபுரம் தொகுதி மக்களின் வரவேற்பிலும், பாசத்திலும் நெகிழ்ந்து போகிறேன் என்றும், எப்போதும் தனது தொகுதி மக்களுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.


