News September 26, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய அறிவிப்பு

நாளை(செப்.27) முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. ஆனாலும், விஜயதசமி அன்று(அக்.2) அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 27, 2025
TN, தெலங்கானா பின்தங்க இவர்களே காரணம்: ரிஜிஜு

தமிழக அரசின் <<17830323>>விழாவில்<<>> தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி, PM மோடியை விமர்சித்ததை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்துள்ளார். X-ல் சில விவரங்களுடன் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் PM மோடியை, விளையாட்டு வீரர்கள் முன் ரேவந்த் தவறாக பேசியுள்ளார். முன்பு விளையாட்டில் முன்னணியில் இருந்த தமிழகமும், தெலங்கானாவும் (ஆந்திரா), திமுக, காங்., ஆட்சியிலேயே சரிந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.
News September 27, 2025
ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?

ஆண்களில் இருபாலின சேர்க்கை (Bi-sexual) மற்றும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளோர் மீது அதிகமான பாலியல் கொடுமை இழைக்கப்படுவதாக அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை உறவுகளில் ஈடுபடுவோரில் பெண் தன்மைகளை வெளிப்படுத்தும் ஆண்கள் (உறவில் உட்படுபவராக இருப்பவர்கள்), வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது 61% அதிகமாக உள்ளதாம். ஆக, ஆண்களுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை.
News September 27, 2025
சூர்யகுமாருக்கு 30% அபராதம்.. BCCI மேல்முறையீடு

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றதை அடுத்து, இந்த வெற்றியை இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமர்பிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்து இருந்தார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி, சூர்யகுமாருக்கு போட்டிக் கட்டணத்தில் 30% ICC அபராதம் விதித்தது. ICC-ன் இந்த முடிவை எதிர்த்து BCCI மேல்முறையீடு செய்துள்ளது.