News August 28, 2025
BREAKING: விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு

BJP கூட்டணியில் இருக்கும் டிடிவி, விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் சர்வே எடுத்தவர்கள் சொல்வதை பார்த்தால், 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, 2026-ல் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யால் பல கட்சிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்; இதை கூறுவதால் தவெகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.
Similar News
News August 28, 2025
சீன வீராங்கனையை சிதறவிட்ட சிந்து

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் Wang Zhi Yi-ஐ எதிர்கொண்ட அவர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இத்துடன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிந்து ஒரு முறை கூட சீனா வீராங்கனைகளிடம் தோற்றதில்லை என்ற சாதனை நீடிக்கிறது.
News August 28, 2025
நல்லகண்ணு நலம்பெற விரும்புகிறேன்: CM ஸ்டாலின்

சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கேட்டறிந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 28, 2025
நடிகர் மாதவன் ஆபத்தில் சிக்கினார்

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள லே பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ‘2008-ல் ‘3 இடியட்ஸ்’ ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.