News October 9, 2025
BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாகோர்காய் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பேரழிவுக் காலத்தில் இலக்கியம் மூலம் ஆற்றிய பங்களிப்புக்கும், கலையின் ஆற்றலை நிலைநிறுத்தியதற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Satantango, War & War, Seiobo There Below, The Last Wolf and Herman உள்ளிட்டவை இவரின் முக்கிய நூல்களில் அடங்கும்.
Similar News
News October 9, 2025
விஜய்க்கு நாளை முக்கியமான நாள்

ஐகோர்ட்டின் கடும் கண்டனங்களை எதிர்கொண்ட விஜய், சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளார். கரூர் துயரம் குறித்து ஓய்வுபெற்ற SC நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. SC அளிக்கும் உத்தரவின்பேரில், விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 9, 2025
தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரத்தின் 6 கேள்விகள்

*பிஹாரில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எத்தனை பேர்?
*இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்? அது 90.7 சதவீதமா?
*மீதமுள்ள 9.3% பேர் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?
*வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதியில்லாதவை?
*எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன *வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை (அ) நகல் பதிவுகள்?
News October 9, 2025
பாக். ஊர் பெயர்களில் IAF தயாரித்த மெனு

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, போலாரி பனீர் மேத்தி மலாய், சர்கோதா தால் மக்கானி, பஹவல்பூர் நான் என்று உணவு பெயர்களுக்கு முன்னால் பாக்., பகுதிகளின் பெயர்களை வைத்தது யார் தெரியுமா? இந்திய விமானப்படை தான். IAF-யின் 93-வது நிறைவு விழாவையொட்டி வழங்கப்படும் விருந்தில் உள்ள மெனு லிஸ்ட் தான் இது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சொல்லி அடிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.