News October 10, 2025
மரியா கொரினோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனுசுலாவை சேர்ந்த மரியா கொரினோ மச்சாடோவிற்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. வெனிசுலாவில் சர்வாதிகாரத்திற்கு எதிராக களமாடி வரும் மரியா, மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராடி வருவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை எதிர்பார்த்து காத்திருந்த டிரம்பிற்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
Similar News
News October 10, 2025
அடங்காத அழுகுரல்.. 30 பேரை கொன்ற இஸ்ரேல்

டிரம்ப்பின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னர், இதுவரை 30 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக பாலஸ்தீன் தெரிவித்துள்ளது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News October 10, 2025
20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!
News October 10, 2025
இதில் உங்களை ஈர்த்த திரைப்படம் எது?

புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் என ஏராளமான தனித்துவமான கதைகள் இந்தியாவில் உள்ளன. இதனை, கற்பனை கலந்து திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில், என்னென்ன திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.