News September 3, 2025

BREAKING: கூட்டணி கிடையாது… தவெக அறிவிப்பு

image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் தவெக கூட்டணி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, இது முற்றிலும் தவறான தகவல் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜய் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் புதுச்சேரி பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

விழுப்புரம்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News December 8, 2025

தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

image

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

News December 8, 2025

விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

image

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!