News October 13, 2025
BREAKING: விஜய்க்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில், CBI விசாரணை கோரி தாங்கள் SC-ல் மனு தாக்கல் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். CBI விசாரணை கோரிய வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
BREAKING: தத்தெடுத்தார் விஜய்.. புதிய அறிவிப்பு

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். உயிரிழந்த 41 குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் ஏற்கவிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை; அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக விஜய் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
விஜய் கட்சியை முடக்க அரசு முயற்சி: ஆதவ் அர்ஜுனா

கரூர் சம்பவத்தை காரணமாக வைத்து தவெகவை முடக்க திமுக அரசு முயல்வதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். வழக்கு விசாரணை நிலுவையில், இருக்கும்போது, அதிகாரிகள் விஜய் மற்றும் தவெகவுக்கு எதிராக கருத்து கூறியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வழக்கை முழுவதும் விசாரிக்காமலேயே ஐகோர்ட் தவெக தலைவருக்கு எதிராக கருத்து கூறியது வேதனையானது எனவும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
கரூர் சம்பவத்திற்கு போலீசாரே காரணம்: ஆதவ் அர்ஜுனா

கரூர் பிரசாரத்திற்கு விஜய், தாமதமாக வந்தார் என சொல்வது அபாண்டமான பொய் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் காவல்துறைதான் தங்களை வரவேற்றது என விளக்கம் அளித்துள்ளார். கரூரில் அசாதாரண சூழல் நிலவுவதாக இருந்தால் பெரம்பலூர் மாவட்டத்தை போல ஏன் தங்களுக்கு முதலிலேயே கூறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.