News December 12, 2024
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் அந்தமான் அருகே டிச.15 புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு அதிகனமழைக்கான Red Alert, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
வாக்குச் சீட்டு முறைதான் ஒரே தீர்வு: சீமான் திட்டவட்டம்

வாக்கு சீட்டு முறை வந்தால்தான் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரத்தை ஊழலில் பெருத்த நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் சொல்லும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது என சொல்லமுடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
News August 28, 2025
மேடையில் நடிகருக்கு மாரடைப்பு.. கவலைக்கிடம்!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ராஜேஷ் கேஷவ்விற்கு(47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பியூட்டிஃபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஹோட்டல் கலிஃபோர்னியா உள்ளிட்ட பல படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார்.