News October 3, 2025

BREAKING: விஜய் கட்சிக்கு பெரும் பின்னடைவு

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மா.செ., மதியழகன் கைதான நிலையில், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பது, தவெக தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Similar News

News March 15, 2026

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவான கட்சி (TVK) அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

News March 15, 2026

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பாகிஸ்தான்!

image

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 30% அளவுக்கு குறைக்க PM ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுத்துறை வாகனங்களுக்கான எரிபொருளை 50% குறைக்க வேண்டும் என்றும், 60% வாகனங்களை 2 மாதங்களுக்கு இயக்க வேண்டாம் எனவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

error: Content is protected !!