News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டு அரங்கில் பெரும் விபத்து

மதுரையில் விறுவிறுப்பாக தயாராகி வரும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டு அரங்கில் 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது. கிரேன் மூலம் நிறுவ முயன்றபோது ரோப் அறுந்ததில் கொடிக்கம்பம் கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஓடிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 20, 2025
ODI ரேங்கிங்கில் காணாமல் போன லெஜண்ட்கள்!

ஐசிசியின் ODI பேட்டிங் தரவரிசை பட்டியலில் இருந்து ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் மாயமாகியுள்ளனர். கடந்த 13-ம் தேதி ரோஹித் 2-ம் இடத்தையும், கோலி 4-வது இடத்தையும் பிடித்திருந்தனர். டி20, டெஸ்ட்டில் ஓய்வு அறிவித்துள்ள இருவரும் கடைசியாக கடந்த பிப்ரவரியில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். தற்போதைய புதிய தரவரிசை பட்டியலில் 784 புள்ளிகளுடன் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டில் விபத்து.. விஜய் புதிய அறிவிப்பு

மாநாட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ் செய்துள்ளார். சற்றுமுன் மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி கொடிக்கம்பம் நிறுவும் பணியின்போது விபத்து<<>> நேரிட்டது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், ₹20 லட்சம் மதிப்பிலான கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், விஜய் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
News August 20, 2025
ரஷ்ய எண்ணெயால் அம்பானிக்கு தான் லாபம் : USA

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெயால், இந்தியாவின் சில தொழிலதிபர்களே பயன்பெறுவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, அதை இந்தியாவில் சுத்திகரித்து, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி நிறுவனங்கள் தான் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகின்றன.