News September 5, 2025
BREAKING: ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்: சசிகலா

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் எனவும், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், நாளை நமதே என்றும் அதிரடி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன், வலிமையோடு எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 5, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? உச்சபட்ச அலர்ட்

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு மெஸேஜ் வந்துள்ளது. லஷ்கர் – இ – ஜிகாதி என அறிமுகப்படுத்தி கொண்ட நபர் அனுப்பிய மெசேஜில், 14 பாக்., தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், 34 கார்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்படிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேரை கொல்ல 400 கிலோ RDX வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
News September 5, 2025
விரைவில் குட்நியூஸ் சொல்லப் போகும் மத்திய அரசு?

டிரம்பின் 50% வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு விரைவில் சலுகைகள் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல், ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின்’ ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. டிரம்பின் வரிவிதிப்பால் ஜவுளி, ஆபரணங்கள் & Gems, என பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
News September 5, 2025
சிங்கப்பூர் போன்று GST இருக்க வேண்டும்: அன்புமணி

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களும் GST வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். GST வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது, என்றாலும், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் போன்று ஒற்றை அடுக்கு GST-ஐ நோக்கி பயணிப்பதே, இலக்காக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.