News September 26, 2025
BREAKING: லெஜண்ட் காலமானார்

இந்திய சிகையலங்கார லெஜண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது (84), வயது மூப்பால் காலமானார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தவர். அந்த பாரம்பரியத்தை ஹபிப்பும் தொடர்ந்தார். Ex PM இந்திரா காந்தியின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் கருப்பு / வெள்ளை கீற்று ஹேர் ஸ்டைல், Ex ஜனாதிபதி அப்துல் கலாமின் அலையலையான சில்வர் ஹேர்ஸ்டைல் இவர் உருவாக்கியது தான். #RIP
Similar News
News January 26, 2026
OPS அவசரப்பட்டிருக்க வேண்டாம்.. TTV வருத்தம்

OPS முதலமைச்சர் வாய்ப்பை தர்மயுத்தத்தால் தவறவிட்டதாக தேனியில் பேட்டியளித்த TTV தினகரன் கூறியுள்ளார். NDA கூட்டணியில் சேர OPS-க்கு அழைப்பு விடுத்துள்ள தினகரன், யார் பேச்சையோ கேட்டு செய்த தர்மயுத்தத்தை தொடங்காமல், ஒருவாரம் பொறுத்திருந்தால் அவர் மீண்டும் முதலமைச்சராகி இருக்கலாம். அவரது வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு. எனவே, நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
News January 26, 2026
NDA கூட்டணி BLACKMAIL கூட்டணி: மு.க.ஸ்டாலின்

அதிமுக -பாஜக கூட்டணி கட்டாயத்தால் உருவான BLACKMAIL கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, வழக்குகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள சுயநலக் கூட்டணியை EPS உருவாக்கியுள்ளதாக சாடிய அவர், 2019, 2021 தேர்தல்களில் ஒன்றாக தோற்றுப் போனவர்கள், புதிய கெட்டப்பை போட்டுக்கொண்டு NDA கூட்டணி என்கிறார்கள். கெட்டப்பை மாற்றினாலும் தமிழ்நாட்டில் கெட் அவுட் தான் என்றார்.
News January 26, 2026
குறட்டை பிரச்னைக்கு இதுவே காரணமா?

சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பவர்கள் அதிகளவில் குறட்டை பாதிப்புக்கு ஆளாவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குறட்டையை தவிர வேறு உடல்நல பிரச்னை எதுவும் இல்லையெனில், வைட்டமின் டி பரிசோதனை செய்வது நல்லதாகும். ஏனென்றால், வைட்டமின் டி குறைபாடு காரணமாக மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு, சுவாசப் பாதை அடைத்து குறட்டை அதிகரிக்கலாம். இதற்கு 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் நடக்க அறிவுறுத்தப்படுகிறது.


