News April 9, 2025
BREAKING: குமரி அனந்தன் உடல் தகனம்

காங்கிரஸ் EX MP குமரி அனந்தனின் உடல், அரசு மரியாதைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. சென்னையில் தமிழிசையின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குமரி அனந்தனின் உடல், பிறகு வாகனத்தில் ஊர்வலமாக வடபழனிக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து மின்மயானத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
Similar News
News September 1, 2025
சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சூர்யா, மீண்டும் போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி படத்திலும் சூர்யா கமிட்டாகியுள்ளார்.
News September 1, 2025
செப்டம்பர் 1: வரலாற்றில் இன்று

*1593 – ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் பிறந்தநாள்.
*1604 – சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதல்முறையாக வைக்கப்பட்டது.
*1939 – மாற்றுத்திறனாளிகள், மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மானியர்களை கருணைக் கொலை செய்வதற்கு ஹிட்லர் ஒப்புதல் அளித்தார்.
*1979 – நாசாவின் Pioneer 11 ஆளில்லா விண்கலம், சனி கோளை 21,000 கி.மீ., தூரத்தில் அடைந்தது. *1980 – நடிகை கரீனா கபூர் பிறந்தநாள்.
News September 1, 2025
USA-க்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தம்

USA-வுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக India Post அறிவித்துள்ளது. USA-வுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுவதால், கடிதங்கள், $100 வரை மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கெனவே முன்பதிவு செய்து பொருள்களை அனுப்ப முடியாத வாடிக்கையாளர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.