News September 30, 2025

BREAKING: கரூர் துயரம்.. அதிகாலையில் அதிரடி கைது

image

விஜய்யின் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரை அதிகாலையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று கைதான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு, அவர் அடைக்கலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 15, 2026

பயிரை மேய்ந்த வேலி: அன்புமணி ஆவேசம்

image

<<19388010>>SP அந்தஸ்து அதிகாரியே<<>> பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் மூலம் TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி நடந்து கொண்டுள்ளது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் சாடியுள்ளார்.

News March 15, 2026

BREAKING: கோர பஸ் விபத்து.. 7 தமிழர்கள் பலி

image

தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண்கள், 5 ஆண்கள் அடங்குவர். அங்குள்ள மங்கம்மா கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், கோர்கா மாவட்டத்தில் இந்த எதிர்பாராத சோகச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

News March 15, 2026

தமிழ்நாடு தேர்தல் தேதி.. BIG UPDATE

image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சற்றுநேரத்தில்(4 மணிக்கு) அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் தேதி உள்ளிட்ட பட்டியலை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள். மேலும் <>நேரலையில் இணைய இங்கு கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!