News October 12, 2025

BREAKING: கரூர் துயரம்.. அதிரடி கைது

image

கரூர் துயர சம்பவத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் S.M.நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் N.ஆனந்த், CTR நிர்மல்குமார் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கில் கரூர் மேற்கு மா.செ., மதியழகனும், சேலம் கிழக்கு மா.செ., வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News October 12, 2025

தீபாவளிக்கான ஸ்பெஷல் கோலங்கள் உங்களுக்காக….

image

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, இனிப்பு மட்டுமல்ல. வாசலில் போடும் அழகான கோலங்களும் தான் ஸ்பெஷல். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அழகாக்கும் கோலங்கள் உங்களுக்காக… ஸ்வைப் பண்ணி பாருங்க…

News October 12, 2025

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

நகை வாங்க திட்டமிட்டோருக்கு, தங்கம் விலை கடந்த வாரம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை ₹4,400 அதிகரித்துள்ளது. அக்.5-ல் (கடந்த ஞாயிற்றுக்கிழமை) 1 சவரன் ₹87,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ₹92,000-க்கு விற்பனையாகி வருகிறது. செய்கூலி, சேதாரத்தை கணக்கிட்டால் 1 சவரனின் விலை ₹1 லட்சத்தை தாண்டும். இனிமே நகை வாங்குறது கஷ்டம்போலயே..!

News October 12, 2025

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் இயக்குநர் டி.ராஜேந்தர் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரபலங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!