News October 6, 2025

BREAKING: கரூர் சென்றார் கமல்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கமல் ஆறுதல் கூற உள்ளார்.

Similar News

News October 6, 2025

இன்றிரவு 12 மணி வரை தூங்காதீங்க

image

கடந்த மாதம் கிரகணத்தின் போது ரத்த சிவப்பில் BLOOD MOON பார்த்தோம். இன்று அதே நிலவை, SUPER MOON ஆகப் பார்க்கப் போகிறோம். பூமிக்கு மிக நெருக்கமாக நிலா வருவதால், வழக்கத்தை விட 14% பெரிதாக, 30% கூடுதல் பிரகாசத்துடன் இன்றும் நாளையும் நம் வானத்தில் பிரகாசிக்கும். இரவு 10 மணி முதல் 12 மணி வரை இதனை கண்டு ரசிக்கலாம். இந்த சூப்பர் மூனை இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் காண முடியும். SHARE IT.

News October 6, 2025

‘நம்ம மெட்ரோ’ கிடையாது; இனி ‘பசவா மெட்ரொ’

image

பெங்களூரு மெட்ரோ பெயரை ‘பசவா மெட்ரோ’ என்று மாற்ற மத்திய அரசுக்கு கர்நாடக CM சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார். இது தற்போது ‘நம்ம மெட்ரோ’ என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ஆன்மிக குருவாக போற்றப்படும் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவன்னாவின் நினைவாக இந்த மாற்றமாம். மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசவன்னாவின் படத்தை மாட்டவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News October 6, 2025

தாடி வளரலையா? இதான் காரணம்!

image

ஆண்களே, தாடி வளரலன்னு கவலையா? பொதுவாக 25 வயது வரை தாடி வளராதது இயல்புதான் என டாக்டர்கள் சொல்றாங்க. அதற்கு பின்னும் தாடி வளராமல் இருக்க, மரபணு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன. பத்து தல படத்தில் வரும் சிம்பு மாதிரி தாடி வளரணுமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள <<17726236>>க்ளிக்<<>> பண்ணுங்க.SHARE.

error: Content is protected !!