News October 18, 2025

தவெகவில் இருக்கிறேன்.. முதன்முறை உறுதி செய்த SAC

image

நான் இப்போது தவெகவில் இருக்கலாம், ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த கட்சியிலும் இல்லை என்று SA சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியை தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். என் ரத்தம் விஜய், எதற்காகவும் பயப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். தந்தை – மகன் இடையே முரண்பாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்முறையாக தான் தவெகவில் இருப்பதாக SAC உறுதிப்படுத்தியுள்ளார்.

Similar News

News March 10, 2026

இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

image

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

News March 10, 2026

ராசி பலன்கள் (10.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!