News October 21, 2025

BREAKING: அதிமுகவில் இணைந்தார்

image

NTK மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை ADMK-வில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை ADMK-வில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால், மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு, EPS புதிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.

Similar News

News October 21, 2025

பெண் குழந்தையின் School Fees-க்கு நிதியுதவி; APPLY NOW

image

CBSE 10-ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் Single Child-ஆக இருக்கும் மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் இருக்ககூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்.23-க்குள் cbse.gov.in -ல் அப்ளை பண்ணுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 21, 2025

உணவை வேக வேகமாக சாப்பிடுறீங்களா?

image

வேகமாக சாப்பிடுவதால், இந்த 3 பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது ✱மெதுவாக சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாக சாப்பிடும் போது, இந்த சிக்னல் கிடைக்காததால், அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் ✱உணவை நன்கு மெல்லாமல் விழுங்குவதால், செரிமான பிரச்னை ஏற்படலாம் ✱ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து குறைவதால், நீரிழிவு நோய் வரலாம். கவனமா இருங்க.

News October 21, 2025

மக்கள் என்னென்ன செய்யணும்? List போடும் PM

image

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து கடிதத்தை எழுதியிருக்கிறார் PM மோடி. அந்த கடித்ததில் மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களை பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ➤யோகா செய்யணும் ➤உள்நாட்டிலேயே தயாரித்த பொருட்களை வாங்கணும் ➤உணவில் எண்ணெய்யை குறையுங்கள் ➤அனைத்து மொழிகளையும் மதிக்கணும் என பல விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். இதில் எதை நீங்கள் ஏற்கனவே பண்றீங்க?

error: Content is protected !!