News August 26, 2025
BREAKING: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 26, 2025
BREAKING: அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 26, 2025
தனது பிறந்த தினத்தை மாற்றிய அன்னை தெரசா.. ஏன்?

’அன்பின் கை’ அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. அன்னை தெரசா எனும் ஆக்னஸ் பிறந்தது என்னவோ ஆக.26, 1910-ல் தான். ஆனால் அவரோ ஆக.27-ஐ தான் தன்னுடைய பிறந்தநாளாக கருதி வாழ்ந்துள்ளார். தெரசா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவர் பிறந்த அடுத்த நாளிலேயே (ஆக.27) ஞானஸ்நானம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதிருந்த அதீத பக்தியால் ஞானஸ்நானம் எடுத்த தினத்தையே தன்னுடைய பிறந்தநாளாக அவர் கருதியுள்ளார்.
News August 26, 2025
நிலவுக்கு அனுமன் சென்றாரா? தமிழிசை பதில்

இமாச்சலில் பள்ளி நிகழ்வு ஒன்றில் பேசிய MP அனுராக் தாகூர் விண்வெளிக்கு முதல்முதலில் சென்றது அனுமன் என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, இதிகாசங்களில் நிலவுக்கு அனுமன் சென்றதாக பதிவுகள் உள்ளன. ஆகையால் அவரது கருத்தில் தவறில்லை என்றார். ராமர் என்ன இன்ஜினியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.