News April 16, 2024
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.90.50க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 14, 2025
மழைக்கால வைரஸ் தொற்றை விரட்டும் கஷாயம்!

✦தேவையானவை: கொய்யா இலை, மா இலை, பப்பாளி இலை, வெற்றிலை, ஓமம், சீரகம், மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சுக்கு, நாட்டு சர்க்கரை ✦செய்முறை: மேலே சொன்ன 4 வகை இலைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீரகம், மிளகு, சுக்கு, ஓமம், ஏலக்காயை மிக்சியில் பொடியாக்கி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீரில் இவற்றை நன்கு கொதிக்க விடவும். 700 மில்லியாக சுண்டிய பிறகு, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.
News November 14, 2025
கார்த்திக் சுப்பராஜுக்கு வாய்ப்பு கொடுப்பாரா ரஜினி?

குறைந்த பட்ஜெட்டில், ஓவர் அடிதடி- ரத்தம் இன்றி ஒரு படத்தை எடுக்கவே சுந்தர் சி-ஐ ரஜினி தேர்வு செய்திருக்கலாம். ஆனால், சுந்தர்.சி விலகிய நிலையில், அந்த வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ரொம்ப வருஷத்துக்கு முன்பே, கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறாராம். ஏற்கெனவே, ‘பேட்ட’ என்ற ஹிட் படத்தை கொடுத்த அவரை டிக் அடிப்பாரா ரஜினி?
News November 14, 2025
BREAKING: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு

பிஹார் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு (மக்களின் தீர்ப்பு) தொடங்குகிறது. கருத்துக்கணிப்புகள் NDA-க்கு சாதகமாக வந்திருக்கிறது. ஆனால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தங்கள் கூட்டணியே வெற்றிபெறும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியிருக்கிறார். வெற்றிப்பெறபோவது யார் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


