News April 2, 2025
BREAKING: இவர்தான் புதிய பாஜக தலைவர்..?

சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு ஏப்.9ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவாக இருக்கிறது. இதனால், தென் மாவட்டங்களில் தேவர், நாடார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய பெரும்பான்மை சமூகத்தினரிடம் இணக்கமாக இருக்கும் நயினாரை தலைவராக அறிவிக்க தலைமை முடிவு செய்துள்ளதாம். இதை அறிந்த, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.
Similar News
News November 23, 2025
மன்னார்குடி வாக்குசாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் இன்று பார்வையிட்டார். வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை சேகரிப்பதற்கும் வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இவற்றில் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
News November 23, 2025
நாளை பள்ளிகளுக்கு 3 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி, மேலும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.
News November 23, 2025
சட்டென காணாமல் போன நடிகைகள்

மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சில நடிகைகள், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர். பலரும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு மறைந்தனர். அவர்களில் சில மறக்கமுடியாத நடிகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களால் மறக்க முடியாத நடிகை யார்? SHARE


