News August 19, 2025
BREAKING: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 3 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக என்.ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் தலைமையக சட்டம் – ஒழுங்கு உதவி IG-யாக முத்தரசியும், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மைய SP-யாக அதிவீர பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 20, 2025
அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷமி

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
News August 20, 2025
உலகின் காமெடியான விலங்குகள்

நமக்குத் தெரியாமல் நம்மை யாராவது போட்டோ எடுத்தால், அதில் நாம் காமெடியாக ஏதாவது செய்திருப்போம். அது போல தான் விலங்குகளும் சில நேரங்களில் காமெடியாக போட்டோக்களில் சிக்கிவிடுகின்றன. இப்படி காமெடி விலங்குகளை போட்டோ எடுப்பவர்களுக்காக போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்படியான போட்டியில் பகிரப்பட்ட சில போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம், Swipe செய்து பார்க்கவும்.
News August 20, 2025
ஏழைமக்களின் உடல் உறுப்புகள் திருட்டு கொடூரம்: மதுரை HC

ஏழை மக்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கொடூரம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்ட வழக்கை CBI விசாரிக்கக் கோரி மதுரை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இதனை தடுப்பதற்கான விரிவான நிலை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.