News February 9, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்த நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மாவின் அசத்தல் சதத்தினால் இந்தியா அந்த ரன்களை எளிதாக துரத்திப் பிடித்தது. இதனையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றியுள்ளது. டி20 தொடரையும் இந்தியாவே வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2026
வெற்றிக் களிப்பு.. ஒவ்வொரு வீரருக்கும் ₹6 கோடி!

2026 T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு BCCI ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தது. இதில் அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா ₹6 கோடி என ₹90 கோடியும், மீதமுள்ள ₹41 கோடி பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், பிற பணியாளர்கள் உட்பட முழு துணை ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 T20 WC வெற்றிக்கு ₹125 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் எதிரொலியால் விமானக் கட்டணம் ₹16,000 வரை அதிகரிக்க உள்ளது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு வரும் 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என அரசு கூறியுள்ள போதிலும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


