News February 2, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

ENG-க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் IND 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த IND, அபிஷேக் சர்மாவின் அதிரடியால் 247 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ENG 4 ஓவர்கள் அதிரடியாக விளையாடியது. அதன்பின், INDவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது.
Similar News
News March 14, 2026
சசிகலாவிற்கு புகழேந்தி வேண்டுகோள்!

புரட்சி அதிமுக என்ற கட்சியை நிறுவிய புகழேந்தி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் சசிகலா குறித்து பேசுகையில், 9 வருடங்களாக சசிகலா எங்கே சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினார். அவர் கட்சி துவங்கியிருப்பது நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்றவர், தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும்; தற்போது பேசிவிட்டு மீண்டும் அமைதியாகி மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதே தனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.
News March 14, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 14, 2026
ரவி மோகனுக்கு பதில் கேள்வி எழுப்பிய ஆர்த்தி

விவாகரத்துக்கு முன்பே கெனிஷா – ரவி இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். அவர் அண்மையில், பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஆண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது Ex மனைவி ஆர்த்தி, இதுவே விவாகரத்துக்கு முன் ஒரு பெண், வேறு ஒரு ஆணுடன் மேட்சிங் உடையில்சென்று, பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என கூறினால் இந்த உலகம் ஏற்குமா என பதிவிட்டுள்ளார்.


