News October 4, 2025
BREAKING: இந்திய அணி அபார வெற்றி!

WI-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் & 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் WI 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 448/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய WI, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Similar News
News March 20, 2026
மின்னணு வாக்கு இயந்திரம் வைப்பதற்கான இடத்தில் ஆய்வு

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்கு இயந்திரம் வைப்பதற்கான இடத்தினை இன்று மார்ச். 20 விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.
News March 20, 2026
தமிழகத்தில் 5 முனைப் போட்டி

TN தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், புதிதாக அஇபுதமமுக – பாமக(ராமதாஸ்) கூட்டணி உருவாகியுள்ளது. NDA உடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவுபடுத்தியதால் திமுக+, அதிமுக+, நாதக, தவெக என தேர்தல் களம் 4 முனைப் போட்டியாக இருந்தது. இன்று உருவாகியுள்ள புதிய கூட்டணியால் 2021-ஐ போல தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. 2021-ல் அதிமுக+, திமுக+, நாதக, மநீம+, அமமுக+ ஆக இருந்தது.
News March 20, 2026
விஜய் மீண்டும் நடிக்கிறார்.. ஷூட்டிங் புறப்பட்டார்

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் விஜய் இன்று இரவு 7 மணிக்கு மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் போது சில காட்சிகளை நீக்க சென்சார் போர்டு அறிவுறுத்தியதால், கதையில் சில மாற்றம் செய்து புதிய காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் புதிய காட்சிகளில் நடிக்கவும், போஸ்ட் புரொடக்ஷென் பணிகளை முடித்து கொடுக்கவும் அவர் மும்பைக்கு பறந்துள்ளார்.


