News September 6, 2025
BREAKING: சீனாவை பந்தாடிய இந்தியா… பைனலில் நுழைந்தது

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீன அணியை துவம்சம் செய்தது. ராஜ்கிர் நகரில் நடந்த போட்டியின் ஆரம்பத்திலேயே அமரக்களமாக தொடங்கிய இந்திய முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மேலும் 4 கோல் அடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. நாளை (Sep 07) இறுதிப்போட்டியில் தென்கொரியாவுடன் மோதுகிறது டீம் இந்தியா. வாழ்த்தலாமே.
Similar News
News March 10, 2026
போர் காலத்தில் இவற்றை செய்தால் தப்பிக்கலாம்

இஸ்ரேல், USA தொடங்கிய போரால் தற்போது மேற்காசிய நாடுகள் பற்றி எரிகின்றன. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில டிப்ஸ் அளித்துள்ளனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இது வெறும் தகவலுக்காக மட்டுமே. போர் வரப்போகிறதா என பதற்றமடைய வேண்டாம் மக்களே. SHARE.
News March 10, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.
News March 10, 2026
பாஜகவின் வக்கிரமான அரசியல்: நாஞ்சில் சம்பத்

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அதை விஜய் எதிர்கொள்வார் எனக் கூறிய அவர், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகவும், அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


