News February 28, 2025
BREAKING: இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,414. புள்ளிகள் சரிந்து 73,198ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி குறியீடு 420 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 22,124ஆக வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வெளிநாட்டினர் தொடர்ந்து திரும்பப் பெறுவது உள்ளிட்டவையே சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News March 23, 2026
₹30,000 சம்பளம், 730 காலியிடங்கள்… APPLY NOW

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/B.E/ B.Tech / M.C.A/ CA. சம்பளம்: ₹30,000 – ₹2,80,000 வரை. தேர்வு முறை: ஆன்லைன், நேர்முகத் தேர்வு. மார்ச் 25-க்குள் இந்த <
News March 23, 2026
தொகுதி குறைகிறதா? பிரேமலதா அவசர ஆலோசனை

திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளின் நெருக்கடியால் தேமுதிகவை 1 தொகுதியை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால், தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. விசிக, சிபிஎம் அழுத்தம் காரணமாக தேமுதிகவுக்கு தொகுதி குறைய உள்ளதாகத் தெரிகிறது.
News March 23, 2026
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.


