News April 24, 2025

BREAKING: பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர்..

image

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர் சிக்கிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த வீரர் பி.கே.சிங்,
தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த பாக்., ராணுவம் சிறையில் அடைத்துள்ளது. அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Similar News

News April 24, 2025

கிங் கோலி மீண்டும் அரைசதம்.. தொடரும் RCB ஆதிக்கம்

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ஆனால் பொறுப்பாக ஆடிய விராட் கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக படிக்கல் அதிரடி காட்ட ரன் வேகமாக ஏறியது. 14 ஓவர்கள் முடிவில் 134/1 ரன்களை RCB சேர்த்துள்ளது.

News April 24, 2025

குரு பயணம்: ராஜயோகம் அடிக்கப் போகும் 3 ராசிகள்

image

ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.

News April 24, 2025

கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

error: Content is protected !!